July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அருள்நிதி, ஜீவா நடிப்பில் வெளியாகும் ‘களத்தில் சந்திப்போம்’

தமிழின் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் களத்தில் சந்திப்போம் .

ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ராஜசேகர் இயக்கியுள்ளார்.

காதல்,நட்பு,நகைச்சுவை என அதிரடி அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ஒரு ஜனரஞ்சக திரைப்படமாக களத்தில் சந்திப்போம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் இரு கதாநாயகர்கள்,இரு கதாநாயகிகள் நடித்து கலக்கியிருக்கிறார்கள். படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கரும் ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தில் சற்று வித்தியாசமான வேடத்தில் ராதாரவி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. காரைக்குடி செட்டியாராக அப்பச்சி என்ற வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் ரோபோ ஷங்கர், பாலசரவணன் போன்றாேர் ஒரு நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் இளவரசு இ பூலோகம் ராஜேஷ்இமாரிமுத்து இநரேன்இஸ்ரீரஞ்சனி இரேணுகா இ உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் முன்னணி நட்சத்திரங்களின் இந்த களத்தில் சந்திப்போம் திரைப்படத்தில் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கெளரவ வேடத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியமாக இரு நண்பர்களுக்கு இடையில் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்ஷன்,கமர்ஷியல் படம்தான் இந்த களத்தில் சந்திப்போம்.

இந்தப்படம் தைப்பூசம் அன்று 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

முதல் முறையாக நடிகர்கள் அருள்நிதியும் ஜீவாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபகாலமாக அருள்நிதி மற்றும் ஜீவாவின் படங்கள் பெரிய அளவில் ஓடாத நிலையில் தற்போது இருவரும் இணைந்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் வரவேற்பை பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.