June 16, 2025 11:15:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரெய்லர் வெளியீடு

முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நகைச்சுவை நடிகரான சந்தானம் முன்னணி நடிகர்களுக்கு இணையான நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் நடித்த பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் ஒரு சில படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் ஒரு கானா பாடகராக கலக்கியுள்ளது ட்ரைலரை பார்க்கும் போதே நமக்கு தெரிகிறது.கானா வாழ்க்கை, காதல் தோல்வி என படம் நகர்வதை ட்ரெய்லரை பார்க்கும் போதே புரிகிறது

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படம் முழுவதும் கானா பாடல்களை வைத்தும் அவரது குடும்ப பின்னணியை வைத்தும் முழு நீள நகைச்சுவை படமாக தயாராகியுள்ளது.

பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் முழுவதும் நகைச்சுவை நிறைந்து இருப்பதால் சந்தானத்திற்கு இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கொடுக்கும் என நம்பலாம்.