January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்புவின் பத்து தல பட போஸ்டர்கள் வெளியீடு

நடிகர்கள் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் பத்து தல படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் போஸ்டர்களை,பத்து தல படத்தின் இசையமைப்பாளர்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அண்மையில் பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் படத்துடன் இணைந்து சிலம்பரசன் நடிப்பில் உருவான ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

ஈஸ்வரன் திரைப்படம், மாஸ்டரை விட மிகவும் குறைவான திரையரங்குகளில் தான் வெளியிடப்பட்டது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் நடிகர் சிலம்பரசன். தற்போது அவர் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.

ஈஸ்வரனை தொடர்ந்து , பத்து தல, மாநாடு படப்பிடிப்பில் பிஸியாகியுள்ளார் சிம்பு.

கன்னட மொழியில் வெளியான மஃப்டி திரைப்படம் தான் பத்து தல என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்த ரீமேக் படத்தில் சிலம்பரசனும் கௌதம் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட பத்து தல பட பாேஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.