January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐந்து நாட்களில் மாஸ்டர் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சாதனை

மாஸ்டர் திரைப்படம் வெளியாகிய ஐந்து நாட்களில் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது .

தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் 10 படங்களில் நடிகர் விஜயின் படம் எப்போதுமே இருக்கும் என்பது உண்மை .அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் வசூல் பட்டியலில் மாஸ்டர் படமும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐந்து நாட்கள் கடந்த நிலையில் உலகளவில் நூறு காேடி ரூபாய் அளவில் வசூல் சாதைன படைத்திருக்கிறது மாஸ்டர் திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்,விஜய் சேதுபதி ,மாளவிகா மோகனன்,ஆண்ட்ரியா,சாந்தனு நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியானது மாஸ்டர் திரைப்படம்.

இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் வெளியானது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு முதன் முதலில் வெளியான பெரிய நடிகரின் படம் என்பதால் ரசிகர்கள் ஏராளமானோர் திரையரங்குகளுக்கு படையெடுத்தார்கள்.

சென்னையில் மட்டும் 5 நாட்கள் முடிவில் 5.43 கோடி ரூபா வசூல் ஈட்டியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் மாஸ்டர் படம் கடந்த 5 நாட்களில் 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஒபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன.

தளபதி விஜயின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவில் ஆந்திரா ,தெலுங்கானா மாநிலங்களில் 20 கோடியும்,கேரளாவில் 7.5 கோடியும்,கர்நாடகாவில் 14 கோடியும்
வசூலித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக ஐந்து நாட்களில் உலக அளவில் 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் வேட்டை செய்துகொண்டிருக்கிறது மாஸ்டர் படம்.

மேலும் வெளிநாடுகளை பார்த்தோம் என்றால் இந்த ஐந்து நாட்கள் முடிவில் மாஸ்டர் நியூசிலாந்தில் 64 .71 லட்சம் ரூபாயும் அவுஸ் திரேலியாவில் 3.85 கோடியும் வசூல் சாதனை படைத்திருக்கிறது.