July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பாஸ் சீசன் 4 வெற்றியாளர்: ஆரி அர்ஜுனன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சுமார் 16 1/2 கோடி வாக்குகளுடன் ஆரி அர்ஜுனன் வெற்றி பெற்றுள்ளார்.

6 கோடியே 14 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பாலாஜி முருகதாஸ் வென்றார். மூன்றாம் இடத்தை ரியோ ராஜ் பெற்றுக் கொண்டார்.

கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கியிருந்தனர்.

குறைந்தளவு வாக்குகளைப் பெற்ற போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேற, இறுதிச் சுற்றுக்கு ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், சோம் ஷேகர் மற்றும் கேப்ரியெல்லா ஆகிய 6 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

ஐந்து லட்சம் இந்திய ரூபாய் பணப்பரிசுடன் கேப்ரியெல்லா வெளியேறிவிட, மிகுதி ஐந்து போட்டியாளர்கள் இறுதிநாள் வரை போட்டியில் இருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 4 இறுதி வாரம்: யார் இந்த ஆரி அர்ஜுனன்?

இன்றைய இறுதி நாள் நேரடி ஒளிபரப்பில் பங்கெடுத்திருந்த போட்டியாளர்களில் சோம் சேகர், ரம்யா பாண்டியன் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர்.

அடுத்ததாக ரியோவை கடந்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் ஷெரின் வெளியே அழைத்துச் சென்றார்.

பின்னர் ஆரியையும் பாலாவையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் நேரடியாக சென்று அழைத்துவந்தார்.

மக்களின் அமோக ஆதரவோடு ஆரி அர்ஜூனன் பிக்பாஸ் சீசன் 4வில் வெற்றி பெற்றதாக கமல்ஹாசன் மேடையில் அறிவித்தார்.