July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சசிகுமாரின் ராஜவம்சம் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீடு

அழிந்துவரும் விவசாயத்தை காப்பாற்றும் விதமாகவும் அவற்றை அழிக்க முற்படும் காப்ரேட்டுகளுக்கு எதிராகவும் பல படங்கள் வந்துள்ளன. இந்த வரிசையில் ஒன்று தான் ராஜவம்சம் திரைப்படம்.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக கருத்து கூறும் திரைப்படமாக உருவாகியுள்ள ராஜவம்சம் திரைப்படத்தை கதிர் வேலு இயக்கியுள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இது சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி ,சதீஷ், யோகிபாபு,மனோபாலா,தம்பி ராமையா,ராதாரவி,ரேகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

செந்தூர் பிலிம்ஸ் பேனரில் டி.டி ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார் .

குறிப்பாக ஒரு கூட்டுக் குடும்பத்தின் பெருமையைச் சொல்லும் படமாக இது இருக்கலாம் என ட்ரைலரை பார்க்கும் போது புரிகிறது.

ஒரு அழகிய கிராமத்து பின்னணியையும் அங்கு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தையும் அதனால் ஏற்படும் பாதிப்பை எடுத்துக் கூறும் படமாகவே ராஜவம்சம் இருக்கிறது.

ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழும் சசிக்குமாரின் வழியாக இந்தப்படம் கூட்டு குடும்ப வாழ்க்கையை சித்தரித்து நகர்கிறது .

யோகிபாபுவின் காமெடியும் இந்த படத்திற்கு உயிரோட்டத்தை வழங்கியுள்ளது.