இந்தப்படத்தில் வழக்கத்திற்கு மாறாக கதாநாயகி லட்சுமி மேனனை வன்முறையில் இறக்கியுள்ள விதம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
கிளைமேக்ஸ் காட்சிகளில் ரசிகர்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ள லட்சுமி மேனனின் சண்டைக் காட்சிகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் இயக்குனர் முத்தையா நடிகை லட்சுமி மேனனை ருத்ர தாண்டவம் ஆட வைத்திருக்கிறார் என்றே ரசிகர்களால் கூறப்படுகிறது.
அதாவது பெண் கதாபாத்திரத்தின் கைகளில் அருவா விளையாடுவது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. வழக்கமான கதைக்களத்தில் இருந்து சற்று மாறுதலாக கதாநாயகியை இறுதியில் சண்டை போட வைத்திருக்கிறார் இயக்குனர்.
முத்தையா போன்ற இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் மிகவும் யதார்த்தமான,மண்வாசனைமிக்க படங்களாகத்தான் இருக்கும். இது வழக்கத்திற்கு மாறாக தன்னுடைய படங்களிலிருந்து இந்தப் படத்திற்கு இயக்குனர் சற்று புதுமையைப் புகுத்தி உள்ளார் என்று சொல்ல வேண்டும்.
புலிக்குத்தி பாண்டி படத்தில் லட்சுமி மேனன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றே கூறலாம்.
பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர்,ஈஸ்வரன், பூமி வரிசையில் பொங்கல் வெளியீடாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகியது புலிக்குத்தி பாண்டி திரைப்படம்.
விக்ரம் பிரபு கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் கதாநாயகியாகவும் நடிக்க வேல.ராமமூர்த்தி,ஆர்கே சுரேஷ் ,சமுத்திரக்கனி,நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் .
சண்டை போட்டுவிட்டு நீதிமன்றம் ,பொலிஸ் நிலையத்துக்கு அலைந்து கொண்டிருக்கும் ஹீரோவை திருத்தி குடும்ப வாழ்க்கையை வாழவைக்கும் மனைவியாக ஹீரோயின் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
குட்டிப்புலி,மருது,கொம்பன் படங்களில் ஹீராக்களின் கதாபாத்திரங்களைப் போல தான் புலிக்குத்தி பாண்டி, விக்ரம் பிரபுவின் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
புலிக்குத்தி பாண்டி திரைப்படத்தில் கொம்பன் படம் மற்றும் குட்டிப்புலி படத்தில் வருவது போல பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சினிமா ரசிகர்களால் கூறப்படுகிறது.
படத்தில் வில்லனான ஆர்.கே. சுரேஷ் கதாபாத்திரத்தை கொடூரமான முறையில் இயக்குனர் உருவாக்கியுள்ளார். ஆகவே புலிக்குத்தி பாண்டி படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
உணர்வுபூர்வமான படங்களை கொடுக்க வல்லவர் தான் இயக்குனர் முத்தையா. படத்திற்கு இசை,திரைக்கதை பின்னணி என நேர்த்தியான படைப்பாக இது காணப்படுகிறது .வன்முறையிலிருந்து பாசத்தை நோக்கி நகரும் படமாக இருப்பதை காண முடிகிறது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக கதாநாயகியை அருவாக் கத்தியை பிடிக்க வைத்து சண்டை போட வைப்பது எல்லாம் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நேரடியாகவே சின்னத்திரையில் வெளியிடப்பட்ட புலிக்குத்தி பாண்டி பொதுவாக நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது .