January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிம்புவின் மாநாடு மோஷன் போஸ்டர் வெளியீடு

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் அடுத்த படம் மாநாடு. இயக்குனர் வெங்கட்பிரபு இந்த படத்தை இயக்குகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கலையொட்டி மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர். இது சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆகவே இருக்கிறது.

ஈஸ்வரன் திரைப்படம் ஒருபக்கம் வெளியாகியுள்ள நிலையில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் சினிமாவில் சிம்பு விட்ட இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

முன்னதாக வெளியான புதிய போஸ்டரில் நடிகர் சிம்புவும் எஸ்.ஜே சூர்யாவும் எதிரும் புதிருமாக நிற்கின்றனர். இதை பார்க்கும்போது படத்தில் எஸ்.ஜே சூர்யா சிம்புவுக்கு வில்லனான நடிப்பதாகவே தெரிகிறது.

இந்த படத்தில் பாரதிராஜா,கல்யாணி பிரியதர்ஷன்,எஸ். ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா ,உதயா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

மாநாடு மோஷன் போஸ்டரை பார்க்கும் போது, சிம்பு துப்பாக்கியுடன் அரசியல் கட்சி மாநாட்டில் யாரையோ பழிவாங்குவதற்காக எதிர்பார்த்து இருப்பது போல தெரிகிறது.

இந்த மோஷன் பாேஸ்டருக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் அற்புதமாக பொருந்தியிருக்கிறது. இது ஒரு அரசியல் சார்ந்த படம் என்பது இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும் போது தெளிவாகிறது.

இந்த மாேஷன் போஸ்டரை சிம்பு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.