January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேப்ரியெல்லா: முன்னணி போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளிய முன்னாள் குழந்தை நட்சத்திரம்

விஜய் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் சீசன் 4’ தற்போது 100 நாட்களை தாண்டியுள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்பது தான் ரசிகர்களிடம் உள்ள ஒரே கேள்வி.

6 பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் முன்னாள் குழந்தை நட்சத்திரம் கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன்.

ஆந்திராவின் ஹைதராபாத்தில் ( தற்போது தெலங்கானா தலைநகரம்) 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி பிறந்த கேப்ரியெல்லா, தனது பள்ளி- கல்லூரி படிப்பை சென்னையில் தான் தொடர்ந்துள்ளார்.

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சென்னை மந்தைவெளியில் உள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியிலும் பயின்றுள்ளார் கேப்ரியெல்லா.

குழந்தைப் பருவம் முதலே நடனத்தில் ஆர்வம் மிக்கவராக இருந்ததால் பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளார் கேப்ரியெல்லா.

முதல் முறையாக 2009ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் வன் ஜூனியர் மூலம் தனது திறமையை உலகுக்குக் காட்டியதன் மூலம் தொலைக்காட்சித் தொடர், திரைப்படங்களுக்கும் வாய்ப்புகளைப் பெற்றார் அவர்.

முதலில் விஜய் டிவியில் வெளியான 7 ‘C’  என்கின்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

2012 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், ஸருதிஹாசன் நடிப்பில் வெளியான “3” திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் முதன் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகை சுருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

சிறு வயது முதலே அபாராத் திறமையுடன் தன்னை வளர்த்துக் கொண்ட கேப்ரியெல்லா இன்று “பிக்பாஸ் சீசன் 4 “ல் ஒரு கலக்கு கலக்கி இறுதிச் சுற்று வரை முன்னேறி இருக்கிறார்.

ஒரு ஸ்டைலிஷ் பெண்ணாக தன்னை மெருகேற்றியுள்ள கேப்ரியெல்லா, அந்தக் குழந்தை நட்சத்திரமா இதுவென அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.

2013ஆம் ஆண்டு, ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த படத்திற்கு பின்னர் , இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா திரைப்படம் மூலம் இவர் தனது திறமையை சினிமா உலகில் நிரூபித்தார்.

முக்கியமாக கேப்ரியெல்லா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபோது இறுதி வரை தாக்குப் பிடிப்பாரா இவர், சிறு பிள்ளையாச்சே என கேட்டவர்கள் பலருண்டு.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பல முன்னணி போட்டியாளர்களை வெளியில் தள்ளிவிட்டு இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளார் கேப்ரியெல்லா.

நடனம், நடிப்பு என பன்முகத் திறமைகளை கொண்ட இவர் ஓவியம் வரைவதிலும் திறமையானவர்.

பிக்பாஸ் சீசன் 4- இல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள கேப்ரியெல்லா தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களின் மனதை கவர்ந்து வெற்றிக் கிண்ணத்தை ஏந்துவாரா – அல்லது அதற்கு முன்னரே பொறுத்திருந்து பார்க்கலாம்.