January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பருத்திவீரன் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘நாற்காலி’

ராம்,மௌனம் பேசியதே,பருத்திவீரன் படங்களின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீர் இயக்கியது குறைந்த அளவு படங்களாக இருந்தாலும் அதிகளவு மக்கள் மத்தியில் பேசப்பட்டது. தரமான கதைக்களம் கொண்ட படமாக உருவாக்குவது இவருக்கு கைவந்த கலை.

தற்போதைய காலகட்டத்தில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள்,பாடகர்கள் என அனைத்து தரப்பினரும் நடிப்பில் இறங்கி கலக்கி வருகின்றனர். அவ்வாறே இயக்குனர் அமீருக்கும் மற்ற எல்லா இயக்குனர்களை போலவும் அவருக்கும் நடிப்பில் ஆசை வந்தது .

இவர் முதலில் யோகி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்த படம் ஒரு சிறந்த தரமான படமாக இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒரு கொரியன் படத்தின் கொப்பி என தெரியவந்ததால் இந்த படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

இதன் பின்னர் தனுஷின் வடசென்னை படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தற்போது நாற்காலி என்ற படத்தில் இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இது ஒரு அரசியல் சார்ந்த படமாக கூறப்படுகிறது. இந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.

மூன் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்துள்ளார். தொட்டி ஜெயா,முகவரி ,காதல் சடுகுடு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட் துரை தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

முக்கியமாக மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் இந்த படத்திற்காகத்தான் இறுதியாக நெஞ்சமுண்டு நேர்மை உண்டு என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதம் தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது

நாற்காலி படத்தில் அமீருடன் சாந்தினி ஸ்ரீதரன்,இமான் அண்ணாச்சி,ஆனந்தராஜ்,ராஜ்கபூர்,மாரிமுத்து,சுப்ரமணியசிவா, சரவண சக்தி,உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.