July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பட்டையை கிளப்பும் விக்ரமின் கோப்ரா டீஸர்

பல வேடங்களில் நடிகர் விக்ரம் நடிக்கும் ஆக்ஷன் படமான “கோப்ரா” டீசர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

வில்லனும், ஹீரோவும் பார்த்துக் கொள்ளாமலேயே கணித அறிவால் மோதிக்கொள்ளும் கதைதான் இந்த கோப்ரா திரைப்படம் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் கணித வல்லுனர் மதி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். கண்டுபிடிக்க முடியாத அளவில் பல்வேறு கெட்டப்புகளில் வந்து ஆச்சரிய மூட்டுகிறார் நடிகர் விக்ரம்.

இந்த படத்தில் வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பத்தான் மிரட்டியிருக்கிறார். ஒரு ஸ்டைலிஷ் வில்லனாக வந்து கலக்குகிறார் இவர்.

இந்த படத்தின் டீஸரை பார்க்கும் போது படத்தின் மேக்கிங் பிரம்மாண்டமாக இருப்பது தெரிகின்றது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய வெற்றிப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து தான் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளதால் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

மிக நீண்ட இடைவெளியின் பின்னர் விக்ரமின் கோப்ரா பட டீஸர் வெளியாகி இருக்கிறது. டீஸரில் காட்டப்படும் அளவிற்கு பிரம்மாண்டம் இந்த திரைப்படத்தில் இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றியை கொடுக்காத போதிலும் இந்த கோப்ரா திரைப்படம் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என படக்குழு எதிர்பார்த்துள்ளது.