January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

” வா தலைவா வா ” ரஜினியை அரசியலுக்கு அழைத்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “வா தலைவா வா” , “மாத்துவோம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்” என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, ரஜிகாந்தின் ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் ரஜினிகாந்தின் உடல் நலத்திற்காக ரசிகர்கள் மும்மத வழிபாடும் நடத்தினர்.

அப்போது ரஜினியின் திரைப்படப் பாடலுக்கு உணர்ச்சி மிகுதியால் ரசிகர்கள் பலர் நடனமும் ஆடினர்.

அண்மையில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் உடல்நிலை ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அந்த முடிவைக் கைவிட்டார்.

இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

இந்நிலையிலேயே அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ரஜினி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.