July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் தனுஷுடன் இணையும் மாளவிகா மோகனன்

நடிகர் தனுஷை வைத்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படம் தனுஷ் 43.

தனுஷ் 43 படப்பிடிப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனன் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் தடம்,மூக்குத்தி அம்மன் புகழ் ஸ்மிருதி வெங்கட்டும் இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம்,மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன .

இந்நிலையில் தனுஷின் 43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

நடிகை ஸ்மிருதி வெங்கட் சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் சமையலறையில் சமைத்துக் கொண்டே இருக்கும் ஆர்.ஜே. பாலாஜியின் தங்கையாக நடித்து பாராட்டுக்களை பெற்றவர்.

இந்நிலையில் தனுஷ் 43 படத்தில் ஸ்மிருதி வெங்கட் தனுஷுக்கு தங்கையாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.