January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துக்ளக் தர்பார் படப்பிடிப்பை முடித்தார் நடிகை ராஷி கண்ணா

தமிழன் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் மீண்டும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.

இது தமிழில் ராஷி கண்ணா நடிக்கும் ஐந்தாவது படமாக கூறப்படுகிறது.

டெல்லி பிரசாத் தீன தயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

கொராேனா தளர்வுகளுக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

தற்பாேது படத்தின் நாயகியான ராஷி கண்ணா தனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் திறமைசாலியான விஜய் சேதுபதியுடன் ஒரு அழகான பயணம் இது.துக்ளக் தர்பார் நிறைவுக்கு வந்தது என பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிகள் என குறிப்பிட்டிருக்கிறார் ராஷி கண்ணா.இந்த படத்தை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை என டுவிட்டரில் அவர் கூறியுள்ளார்.

தமிழில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார் ராஷி கண்ணா .தமிழில் சக நடிகைகளுக்கு போட்டியாக முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த ப டங்களும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. ஆகவே 2021 தமிழ் சினிமாத் துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும் என நாம் எதிர்பார்க்கலாம்

https://twitter.com/RaashiKhanna/status/1347077249896382464?s=20