January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரபரக்கும் திகில் காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் ‘பீட்சா- 3’ டீசர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற படமான பீட்சா, நடிகர் விஜய் சேதுபதிக்கு வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாகவும் நல்ல பெயரை கொடுத்திருந்தது.

இந்த படத்தின் வெற்றியைத் தாெடர்ந்து பீட்சா 2 திரைப்படம் தயாரிப்பாளர் சி.வி குமார் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இருந்தபோதிலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றதாக அதன் தயாரிப்பாளர் அண்மையில் கூறியிருந்தார். இந்த பாகம் இரண்டில் நடிகர் அசாேக் செல்வன் நடித்திருந்தார்.

தற்போது உருவாகியுள்ள பீட்சா 3 திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாரின் வேதாளம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அஸ்வின் குமார் நடித்துள்ளார்.

தற்பாேது வெளியாகியுள்ள பீட்சா 3 டீசர் ஹொலிவூட் பாணியில் திகில் காட்சிகளுடன் இருப்பதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.