January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாதனை படைத்த வாத்தி கம்மிங் பாடல்

10 கோடி பார்வையாளர்களைத் தாண்டி வாத்தி கம்மிங் பாடல் சாதனை படைத்திருக்கிறது.

தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடலின் லிரிக்கல் வீடியோ 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதை வரவேற்கும் விதமாக படக்குழுவினர் 10 நொடி புரோமோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆடிய நடன அசைவுகளை உள்ளடக்கிய படக்காட்சிகளை வைத்து இந்த 10 நொடி புரோமோ தயார் செய்யப்பட்டுள்ளது.

மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையையொட்டி எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நீண்ட காத்திருப்புக்கு கிடைத்த பரிசு என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

கடுமையான கொரோனா தொற்றுக்கு பிறகு,மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் இந்த சந்தர்ப்பத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு முன்னணி நட்சத்திரமாக திகழும் தளபதி விஜயின் படம் திரையரங்கில் வெளியிடப்பட இருப்பது சினிமா வட்டாரத்தில் ஒரு புது உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.