புராண படங்களுக்கும் சரித்திர படங்களுக்கும் வரலாற்றுக் கதைகளுக்கும் தான் மவுசு அதிகமாக இருக்கிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இவை மிகப்பெரும் வெற்றி பெறுகின்றன.
இதனால் இயக்குனர்கள் இவ்வாறான படங்களை எடுப்பதற்கு தற்போது வரிசைகட்டி நிற்கின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு மொழியில் எடுக்கப்படவுள்ள புராணக் கதைப் படமான சகுந்தலம் திரைப்படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மற்ற மாெழி சினிமாக்களை விட தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை வரலாற்று கதைகள், புராணக் கதைகள் போன்றன பிரமாண்டமாக, மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படுகின்றன. அந்தக் கதையில் நிஜமாகவும் தத்ரூபமாகவும் கொண்டுவந்திருப்பார் இயக்குனர். அதற்கு உதாரணம் தான் பாகுபலி,ருத்ரமாதேவி பாேன்ற படங்களாகும்.
காளிதாசர் எழுதிய புகழ்பெற்ற காவியம் தான் சகுந்தலையின் காதல் கதை . இதனை ருத்ரமாதேவி, ஒக்கடு ,அர்ஜூன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய குணசேகரன் இயக்க உள்ளார்.
முன்னதாக,பூஜா ஹெக்டே,அனுஷ்கா ஆகியோர் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இறுதியாக என்னவோ படக்குழுவினர் சமந்தாவை தெரிவு செய்துள்ளனர்.
விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்தவர்தான் சகுந்தலை.இதில் துஷ்யந்தனும் சகுந்தலையும் காதலிக்கிறார்கள். பின்னர் துருவாச முனிவரின் சாபத்தால் அந்த காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தன் சகுந்தலையுடன் எப்படி இணைகிறார் என்பதுதான் கதையாகும் .
இதனை கருவாக வைத்து சகுந்தலம் திரைப்படம் எடுக்கப்படுகிறது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் உருவாகிறது.இதில் சமந்தா சகுந்தலை ஆக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.