
படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சோனு சூட் தற்போது கிசான் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இவர் அருந்ததி, சந்திரமுகி ,தபாங் என பல படங்களில் வில்லன் நடிகராக மட்டுமே நடித்து வந்த நிலையில் தற்போது ஹிந்தியில் கிசான் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ட்ரீம் கேர்ள் படத்தை இயக்கிய ராஜ் சாண்டில்யா தான் கிசான் படத்தை தயாரிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அடுத்ததாக சூல் என்ற ஹிந்தி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வென்றவரும், இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குனரான ஈஸ்வர் நிவாஸ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.
கிசான் படத்தில் நடிக்கவுள்ள சோனு சூட்டிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வில்லனாக தெரிந்த சாேனு சூட் , ஏழை எளிய மக்களின் கண்களில் தெய்வமாக தாேன்றியுள்ளார்.இதனால் தான் அவருக்கு காேயில் கட்டி வழிபாடு நடத்துகிறார்கள் வட இந்திய மக்கள்.
கொரோனா காலத்தில் புலம்பெயர் தாெழிலாளர்களை பாதுகாப்பாக தமது சாெந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்த பெருமை சோனு சூட்டைத்தான் சேரும்.
உயிர் பிழைத்து ஊர் பாேய் சேர்ந்த தொழிலாளர்கள் தமது நன்றிக் கடனாக ,பிறந்த குழந்தைகளுக்கும், தமக்கு வாழ்வாதாரத்தை தரும் கடைகளுக்கும் சோனு சூட்டின் பெயரை வைத்துள்ளார்கள்.
ஒரு சாதாரண வில்லன் நடிகர் ,குறுகிய காலத்தில்,ரியல் ஹீரோவாக மாறியது வியப்புக்குரியதே. அவரது மனிதநேயமும், அர்ப்பணிப்பும்,அளவிடமுடியாத சேவை மனப்பான்மையும் சாேனு சூட்டை உலகறிய வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
இதனால் சாேனு சூட்டை வில்லன் கதாபாத்திரங்களை தவிர்த்து, நிஜ கதாநாயகனாக படங்களில் நடிக்கும்படி அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் அவர் வில்லன் வேடங்களைத் தவிர்த்து ,கதாநாயகனாக அவதாரம் பூண்டுள்ளார்.
முதன் முதலில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக ஆதரவுக்குரல் வழங்கியது நடிகர் சோனு சூட் தான். விவசாயிகள் தான் நாட்டின் பெருமை என அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கிசான் படமானது எந்த மையக்கருவை வைத்து எடுக்கப்படவுள்ளது என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.