July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொங்கலுக்கு வெளியாகும் நான்கு திரைப்படங்கள்

கொரோனா தொற்றின் காரணமாக நவம்பரிலிருந்து வெறும் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், 100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தளபதி விஜய் முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை இயங்க அரசு அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனிடையே ஜனவரியில் வெளியாகும் நான்கு திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது .

இளையதளபதி விஜயின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் இவை இரண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.அதே நேரம் ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் ஹாட்ஸ்டார் இல் வெளியாகிறது.

இதேபோல புலிகுத்தி பாண்டி என்ற விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகிறது

மாஸ்டர் படம் மட்டும் ஜனவரி 13 ஆம் திகதி வெளியாகிறது. ஏனைய மூன்று படங்களும் 14 ஆம் திகதி வெளியாகிறது.

எது எப்படியோ இந்த கொரோனா காலகட்டம் முடியும் தருவாயில்இமனதுக்கு குதூகலமாக திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தோடு படங்களைப் பார்க்கும் மகிழ்ச்சியை அனைவரும் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.