January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவகார்த்திகேயனின் டாக்டர் படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் . கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த விழாவில் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன்,இயக்குனர் நெல்சன் ,கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் டாக்டர் படத்தை அடுத்து இயக்குனர் நெல்சன் தளபதி விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது.

தளபதி விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தளபதி 65 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வலம் வருகின்றன.

தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மிக விரைவில் டாக்டர் திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

டாக்டர் சின்னம் பொறித்த கேக் செய்யப்பட்டு அதனை வெட்டிக் கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.

சிவகார்த்திகேயன் இறுதியாக நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு பேசப்படவில்லை என்றாலும், இந்த டாக்டர் படம் தரமான படைப்பாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் நெல்சன் அடுத்ததாக தளபதி விஜயை வைத்து படம் எடுக்கவுள்ள நிலையில் டாக்டர் படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.