January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒரே டேக்கில் மிரட்டும் சிம்பு; இசை வெளியீட்டில் பாரதிராஜா புகழாரம்

கொரோனா காலத்தில் சோர்ந்து போயிருக்கும் ரசிகர்களை உற்சாகமூட்டும் விதமாக ஈஸ்வரன் திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பாலாஜி, இயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, கதாநாயகன் சிம்பு,கதாநாயகி நிதி அகர்வால்,நந்திதா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்

இதில் பேசிய பாரதிராஜா, சிம்புவின் நேரம் தவறாமையையும் ஒரே டேக்கில் நடிக்கும் அவரின் திறமையையும் பார்த்து வியந்து போய்விட்டதாக புகழ்ந்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான தமிழன் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஈஸ்வரன் படப் பாடல்கள் அனைத்தும் சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு தரமாக அமைந்திருக்கும் என நம்பலாம்.

வரும் பொங்கல் அன்று 14 ஆம் திகதி திரைப்படத்தை திரையரங்குளில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பது இசை வெளியீட்டு விழாவின் போதே தெரிந்தது.

கிராமத்து பின்னணியைக் கொண்ட இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சிம்பு பட்டு வேட்டி சட்டையில் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விழாவில் பேசிய சிம்பு அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் மாநாடு, பத்துத் தல உட்பட மேலும் மூன்று படங்கள் தன் கைவசம் இருப்பதாக ரசிகர்களிடம் தெரிவித்தார்.