June 18, 2025 23:20:28

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அந்தாதூன்” திரைப்படம் தமிழில் “அந்தகன்” என பெயர் மாற்றம்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு நடிகர் பிரசாந்த் நடிக்கும் “அந்தாதூன்” ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஹிட்டான “அந்தாதூன்” படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்தப் படத்தில் பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஜே.ஜே. ஃபெட்ரிக் இந்தப் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான தமிழ் நடிகர்கள் யார் யார் என அண்மையில் செய்திகள் வெளிவந்தன.

இந்த படத்தில் தபு கேரக்டரில் சிம்ரன் நடிக்க இருப்பதாகவும் , நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் “அந்தாதூன்” தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

“அந்தாதூன்” ஹிந்தி திரைப்படம் தமிழில் அந்தகன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது “அந்தாதூன்” .

ஹிந்தியில் 40 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 450 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராதிகா ஆப்தே ,ஆயுஷ்மான் குரானா, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.