நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ருத்ரன். இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிரியா பவானி சங்கரின் பிறந்தநாளை ஒட்டி இந்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இறுதியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு காஞ்சனா3 படம் வெளியானது. பின்னர் ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து லக்ஷ்மி என்ற பெயரில் காஞ்சனா படத்தை ரீமேக் செய்து இயக்கினார் ராகவா லாரன்ஸ்.
இந்நிலையில் தற்பாேது நடித்து வரும் ருத்ரன் படத்திற்கு ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ப்ரியா பவானி சங்கர் . இதன் பின்னர் கடைக்குட்டிசிங்கம் , மாபியா ,மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றன.
தற்போது குருதி ஆட்டம்,சிம்புவின் பத்துதல,இந்தியன்2,உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார் ப்ரியா பவானி சங்கர். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாவதால் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.மேலும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஆடுகளம்,பொல்லாதவன், ஜிகிர்தண்டா பாேன்ற படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தில் இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.