January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனவரி 2 வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ டீஸர்

தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதிக்கு பிறகு அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஹீரோவாக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி.

ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது ஒரு வெற்றிக் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர். இசையமைப்பாளர்களும் நடிகராகலாம் என்ற மாறுபட்ட விதியை எழுதியவர் விஜய் ஆண்டனிதான்.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, புதுப்புது பட டைட்டில்களை வைத்து ரசிகர்களை மகிழ்விக்கும் விஜய் ஆண்டனி எப்போதுமே ஒரு மாறுபட்ட சிந்தனையாளர் என்றே கூறலாம்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள ஒரு சில படங்கள் தோல்வியை தழுவினாலும் தற்போது பழையபடியே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் கோடியில் ஒருவன். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜனவரி இரண்டாம் தேதி கோடியில் ஒருவன் டீசர் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கடந்த சில படங்கள் விஜய் ஆண்டனிக்கு தோல்விகளை கொடுத்திருந்தாலும் ,கோடியில் ஒருவன் படம் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.