July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் புலிக்குத்திப் பாண்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் கொம்பன், கொடிவீரன், தேவராட்டம், குட்டி புலி ,மருது ஆகிய படங்களை இயக்கியவர் தான் முத்தையா. தற்போது இவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புலிக்குத்தி பாண்டி.

கிராமத்து மண்வாசனையை மாறுபட்ட முறையில், அதிரடியாக படம்பிடித்து காட்டுபவர்தான் இயக்குனர் முத்தையா. இவரின் கொம்பன், குட்டி புலி ,மருது உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இயக்குனர் முத்தையாவின் கொடிவீரன், தேவராட்டம் போன்ற படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை ,மதயானைக்கூட்டம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார் .

கையில் ஈட்டியுடன் வெறித்தனமாக பாயும் விக்ரம் பிரபுவின் புலிக்குத்தி பாண்டி போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கம் போலவே புலிக்குத்திப் பாண்டி திரைப்படமும் நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடப்படுவதற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான வேலைகள் தற்பாேது அசுரவேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளிக்கு நான் ரொம்ப பிஸி என்ற படத்தை நேரடியாகவே டிவியில் வெளியிட்டது. இந்நிலையில் பொங்கலை ஒட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புலிக்குட்டி பாண்டி ,சன் டிவியில் நேரடியாகவே ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் முத்தையாவின் ஏனைய படங்களைப் போல இந்த படத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.