October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைரலாகும் மாதவனின் ‘மாறா’ பட ட்ரெய்லர்

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள மாறா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது சமூக வலைத் தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

இந்தப் படம் மலையாளத்தில் துல்கர் சல்மான் ,பார்வதி மேனன் நடித்து வெளியான சார்லி படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் ஆகும்.

மாறா திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 8ஆம் திகதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது .இந்தத் தகவல் நடிகர் மாதவனின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விஷயமாகும்.

இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் மாதவன் ,ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,மௌலி ,எம்எஸ் பாஸ்கர் ,ஷிவாதா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே மாதவனுக்கு ஜோடியாக விக்ரம் வேதா படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் இந்த படத்திலும் ஜோடியாக நடித்திருக்கிறார் .இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ஒத்துப் போவதால் கதைக்கு பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகிறது .

கதையின் நாயகனான மாறாவைத் தேடி நாயகி போகும் பயணத்தில் மாறாவை சந்தித்தாரா, இருவரும் இணைந்தார்களா? என்பது போல ட்ரெய்லரில் அழகாக காட்டப்பட்டிருக்கிறது.

மலையாளத்தில் சார்லி படத்தை பார்த்தவர்களுக்கு இந்தப் படத்தின் கதை இலகுவாக புரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக மாதவன் தனது கெட்டப்பை மாற்றி உள்ளார். ஒரு அழகான லுக்கிற்கு மாறியுள்ளார்.இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்வுபூர்வமிக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மாதவன்.

அமேசானில் வெளியாகும் மாறா படத்திற்கு ,மலையாளத்தில் வெளியான சார்லி படத்திற்கு கிடைத்ததைப் போலவே மிகப்பெரிய வெற்றி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

இந்த படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது அழகான காட்சி அமைப்புகள் , கதை நகர்ந்து செல்லும் தன்மை போன்றன வெற்றிப்படமாக அமையும் என்பதை உணர்த்துகிறது.

பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் மாஸ்டர் ,சிம்புவின் ஈஸ்வரன் ஆகியன திரையரங்குகளில் வெளியாகிறது . மாதவனின் மாறா மற்றும் ஜெயம் ரவியின் பூமி படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளன. இதில் திரையரங்குகளுக்கும், ஓடிடி தளத்துக்கும் இடையே தாறுமாறான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2021 பொங்கலுக்கு ஏகப்பட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன . அந்த வரிசையில் பொங்கல் பந்தயத்தில் எந்த படம் முன்னணியில் இருக்கப்போகிறது என்பதே அனைவரது கேள்வியாகவும் இருக்கிறது.