January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொங்கல் பந்தயத்திற்கு தயாரான ஈஸ்வரன் திரைப்படம்

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ளதாக அப்படத்தின் கதாநாயகன் சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இம்முறை பொங்கலை ஒட்டி ரசிகர்களுக்கு டபுள் விருந்து காத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்த பொங்கல் பந்தயத்தில் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் ,விஜய்யின் மாஸ்டர் படத்துடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது .

கடந்த சில நாட்களாக சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜனவரி 14 ஆம் திகதி ஈஸ்வரன் திரைப்படம் திரையிடப்படும் என சிம்பு டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்காளை ஜனவரி 14 ஆம் திகதி வரான் என படத்தின் வெளியீட்டு போஸ்டரில் தமிழில் காணப்படுகிறது. உலகம் முழுவதும் தைப்பொங்கல் அன்று ஈஸ்வரன் திரையிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜாேடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் பொங்கல் அன்று விஜயின் மாஸ்டருடன் ,சிலம்பரசனின் ஈஸ்வரன் நேரடியாக மோதுகிறது.

இதன் முலம் சிம்பு மீண்டும் பழையபடி தனது ஆட்டத்தை காட்ட தாெடங்கியிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னணி நடிகராக வலம் வந்த சிம்பு சில காலம் ஒதுங்கியிருந்தார். தற்போது அதே பழைய வேகத்துடன் போட்டி போட இறங்கியுள்ளது வரவேற்கத்தக்கதே. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயுடன் மோதும் சிம்புவை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இதனால் பொங்கல் கொண்டாட்டம் தற்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள படம் தான் ஈஸ்வரன்.

இந்தப் படத்திற்காகத்தான் சிம்பு தனது உடல் எடையை 107 கிலோவிலிருந்து 70 கிலோ வரை குறைத்திருந்தார் .