February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வேலுநாச்சியார்” திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை : நயன்தாரா

சிவகங்கைச் சீமையை ஆண்ட வீரமங்கை ‘வேலுநாச்சியார் வாழ்க்கை’ வரலாற்று படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.

கந்தசாமி, திருட்டுப்பயலே ஆகிய படங்களை இயக்கிய சுசிகணேசன் இயக்கத்தில் இந்த படம் தொடங்கப்பட இருப்பதாகவும் அதில் நயன்தாரா நடிப்பதாகவும் ஒரு தகவல் வந்திருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் தான் நடிப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என்றும், தவறான வதந்திகளைப் பரப்பாமல் உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிகொண்டு தன் இராஜ்ஜியத்தை மீட்ட வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. சிவகங்கை மண்ணின் வீரத்தை சொல்லும் படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.