
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண்தேஜா கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தனக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக ராம்சரண் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ள அவர் ,தான் விரைவில் நலமடைந்து விடுவேன் என எதிர்பார்ப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவைப் பார்த்த ராம்சரணின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டுமென வாழ்த்தியுள்ளனர்.
எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கிய மகதீரா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ராம்சரண்தேஜா.
மீண்டும் இயக்குனர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் RRR என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த நிலையில் ராம்சரண் கொராேனா பரிசோதனை செய்துள்ளார். அதில் கொரானா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Request all that have been around me in the past couple of days to get tested.
More updates on my recovery soon. pic.twitter.com/lkZ86Z8lTF— Ram Charan (@AlwaysRamCharan) December 29, 2020