
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய காலத்தில் நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கல் தினமான ஜனவரி 14ஆம் திகதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் ஜனவரி இரண்டாம் திகதி ஈஸ்வரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
யுகபாரதி எழுதிய இந்த படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்களுக்கு சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமத்து கதைக்களத்தை கொண்ட இந்தப் படத்தில் சிம்பு ,நிதி அகர்வால், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர்.
சிம்புவின் படப் பாடல்களுக்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கும் .அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியாகும் சிம்பு படப் பாடல்கள் பட்டி தாெட்டி எங்கும் பட்டையை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.