January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு

புரட்சி கலைஞர் விஜயகாந்தை வைத்து ஊமை விழிகள் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் தற்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு படம் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் வித்தியாசமான பொலிஸ் கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் ஊமை விழிகள். இந்தப் படம் பட்டிதொட்டியெங்கும் ஓடி பட்டையை கிளப்பியது.

இதனையடுத்து விஜயகாந்துடன் வெற்றிப்படமான உழவன் மகன் படத்திலும் இயக்குனராக பணியாற்றினார் அரவிந்த் ராஜ்.இவர் தற்போது பத்து வருடம் கழித்து மீண்டும் திரைப்படம் இயக்குகிறார்.

தேசியத் தலைவர் என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் வகையில் பல புகைப்படங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதில் மறைக்கப்பட்ட வரலாறு என்ற வசனமும் போஸ்டரில் இடம்பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆகவே இந்தப் படம் மீதான சர்ச்சைகளுக்கு குறைவிருக்காது என்றே கூறலாம்.

தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ரசிகர்கள் வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது