October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாஸ்டர் வெளியீடு குறித்து நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு

என்ன நண்பா ரெடியா ? என்று வெறிச்சோடிய திரையரங்குகளுடன் தொடங்கும் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளனர் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் .

அதில் விஜயின் கட்டவுட் போஸ்டர்களுடன் ,ரசிகர்கள் ஆட்டம் ,பாட்டம் ,கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் மாஸ்டர் படத்தை பார்ப்பது போல வீடியோவில் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தைத் தயாரிக்கும் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம், நாளை 12.30 மணியளவில் மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட அறிவிப்பு வெளியாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் 22ஆம் திகதி முதல் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. பின்னர் நவம்பர் 10ஆம் திகதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது .

இதனிடையே திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதியளிக்க வேண்டி தமிழக முதல்வரிடம் விஜய் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் திகதி வெளியாக உள்ளதாக தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருக்கிறார் .

தற்போது படத்தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் நாளை 12:30 அளவில் மாஸ்டர் திரைப்பட வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என பதிவிட்டுள்ளது.