January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துல்கர் சல்மானின் ஹே சினாமிகா படப்பிடிப்பு நிறைவடைந்தது

முன்னணி நடன இயக்குனராக இருந்து , திரைப்பட இயக்குனராக மாறியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.

காஜல் அகர்வால், துல்கர் சல்மான் , அதிதி ராய் நடிப்பில் இந்த சினாமிகா படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் ,ஆகஸ்ட் மாதம் முதல் விதிமுறைகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

பிருந்தா மாஸ்டர் , தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்னத்தின் படங்களில் தான் அதிகமாக டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்திலும் பிருந்தா மாஸ்டர் பணியாற்றியுள்ளார். துல்கர் சல்மான் ஹீராேவாக நடித்த இந்த படத்தில் ஹே சினாமிகா என்ற பாடல் இடம் பெற்றது.

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் உருவான ஹே சினாமிகா சீறும் சினாமிகா பாடலில் இருந்து முதல் வரியை தனது படத்துக்கு தலைப்பாக வைத்த பிருந்தா மாஸ்டர் ,துல்கர் சல்மானையே இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளார்.

ஹே சினாமிகா படம் தான் ரிலையன்ஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் தயாரித்துள்ள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ் மட்டுமல்லாமல் இந்திய அளவில் முன்னணி டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவரான பிருந்தா தற்போது இயக்குனராக மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிருந்தாவின் இயக்கத்தில் துல்கர் சல்மான் ,காஜல் அகர்வால் ,அதிதிராய் நடிக்கும் படத்தின் அறிவிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான நிலையில் ,படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது.

படத்தின் பெயரை பார்க்கும் போது அழகிய காதல் கதையைக் கொண்ட ஒரு படமாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.