
சிவகங்கைச் சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியாராக, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய வேலு நாச்சியார், நிர்வாகத்திலும் திறம்பட விளங்கினார். மேலும் அக்காலத்து அரசர்களுக்கு தேவையான வாள் வீச்சு, ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என ஆண் மன்னர்களுக்கு நிகரான அனைத்து திறமைகளையும் வளர்த்துக்கொண்டு அரசாண்டவர்.இவரின் காலகட்டம் 17 ஆம் நூற்றாண்டு.
ஆண் அரசர்களே அந்தக்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்க பயந்தபோது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இப்படிப்பட்டவரின் வரலாற்றை படமாக எடுப்பதை, தமிழக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
வரலாற்று படங்களில் தமிழ் மன்னர்களைப் பற்றிய திரைப்படங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அந்த குறையை போக்கும் விதமாக வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் பிரபல இயக்குனர் சுசி கணேசன் இறங்கியுள்ளார்.