இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தற்போது “பகைவனுக்கு அருள்வாய்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபலங்கள் மூவர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர்களான சூர்யா, ப்ரித்விராஜ் மற்றும் இயக்குநர் ராம் கோபால் வர்மா உள்ளிட்டோர் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்கள்.
நடிகர் ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த “திருமணம் என்னும் நிக்கா” படத்தின் இயக்குநர் அனீஷின் இரண்டாவது படம் தான் “பகைவனுக்கு அருள்வாய்” திரைப்படம்.
இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வாணிபோஜன் மற்றும் பிந்து மாதவி என இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற திரைப்படங்கள் சசிகுமார் கைவசம் உள்ளன.
சில நாட்களுக்கு முன்பாக தான் பகைவனுக்கு அருள்வாய் டைட்டில் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டிருந்தார்.
தற்போது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா, மலையாள நடிகர் பிருத்விராஜ்,மற்றும் இயக்குநர் ராம்கோபால் வர்மா உள்ளிட்டோர் தமது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.
போஸ்டரில் கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், மற்றும் கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு கையில் சிகரெட் வைத்திருப்பதைப்போல சசிகுமார் காணப்படுகிறார்.
இது எவ்வகையான கதாபாத்திரத்தை உணர்த்துகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அனீஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை கூர்கா படத்தைத் தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது.
Happy to reveal the First Look poster of @SasikumarDir's #PagaivanukkuArulvai
Best wishes to the entire team!Directed by @AnisDirector @thebindumadhavi @vanibhojanoffl @sathishninasam @GhibranOfficial @4monkeysStudio @tkishore555 @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/mzSR95fXcQ
— Suriya Sivakumar (@Suriya_offl) December 25, 2020