January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் விக்ரமின் கோப்ரா பட செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் 15 தோற்றங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதேநேரம், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎப் படப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது .தமிழ், தெலுங்கு ,ஹிந்தியில் தயாராகும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார்.

லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து இருக்கிறார் . இதனால் இசைப்பிரியர்கள் எப்பாேது திரைப்படம் வெளியாகும் என காத்திருக்கினறனர்.

தொடர்ச்சியாக படிப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கோப்ரா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் டிமாண்ட்டி காலனி அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டில் நயன்தாரா ,அதர்வா ,பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவான இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார் .இவை இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றிருந்தது

இந்நிலையில் மூன்றாவது படமாக கோப்ராவில் இணைந்தார் அஜய் ஞானமுத்து. ஸ்ரீநிதி செட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வெளியான போஸ்டரில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.