நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் நாளைய தினமும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
அவரது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் இன்று இரவு மருத்துவமனையில் இருப்பார் எனவும், நாளைய தினம் அவருக்கு உடல்நல பரிசோதனைகள் நடைபெற இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
இதனிடையே தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் , நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்துள்ளனர்.
அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்த ரஜினிகாந்திற்கு, திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சையில் உள்ள ரஜினிகாந்திற்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது .
ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் ஓய்வில் இருந்து வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.