
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர் .
வரும் 13ஆம் திகதி பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் திரைப் படத்திற்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.
மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் இருபது நாட்களே இருக்கும் நிலையில் தற்போது சென்சார் சான்றிதழுடன் புதிய போஸ்டர் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
முன்னதாக மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
கடந்த தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் தள்ளிப் போனது. இந்த நிலையில் வரும் 13 ஆம் திகதி பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஆகவே மூடப்பட்ட திரையரங்குகளுக்கு மாஸ்டர் படத்தின் மூலம் திறப்பு விழா நடத்த தயாராகி வருகிறது திரைப்படத்துறை.