January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பத்து இயக்குனர்கள் வெளியிட்ட சிம்பு படத்தின் தலைப்பு

சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்திற்கு பத்துத் தல எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக பத்து இயக்குனர்கள் சேர்ந்து இந்த பத்து தல படத்தின் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் மஃப்டி. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்தான் பத்து தல என்ற பெயரில் தற்போது படமாக்கப்பட உள்ளது

படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்திற்கான வேலைகளை தற்போது ஆரம்பித்திருக்கிறது. இதில் சிவராஜ்குமார் வேடத்தில் சிம்புவும், ஸ்ரீ முரளி வேடத்தில் கௌதம் கார்த்திக்கும் நடிக்க உள்ளனர்.இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

சிம்பு தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருவதால் இடையில் நின்று போன இந்த படத்தை மீண்டும் தொடங்குவதற்கு படக்குழுவினர் தீர்மானித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த பத்து தல என்ற படத்தின் பெயரை வெங்கட்பிரபு ,ஆனந்த் ஷங்கர் ராஜேஷ், விஜய்மில்டன் ,விக்னேஷ் சிவன் ,கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் ஜெயக்குமார், பா ரஞ்சித், சம் அண்டன் ,அஸ்வத் மாரிமுத்து என பத்து இயக்குனர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் .

பத்து இயக்குனர்கள் பத்து தல என்ற பெயரில் வெளியிட்டு இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் ,கருத்துப் பாேன்றவை இனிவரும் நாட்களில் தெரியவரும் .