
நடிகர் வடிவேலுவின் முகச் சாயலுடன் அவரது நடிப்பு பாணியை பின்பற்றி தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த வடிவேல் பாலாஜி காலமானார்.
பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின்னர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது ரசிகர்களும் சினிமா துறை சார்ந்தவர்களும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.45 வயதான பாலாஜிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.