January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருநங்கைகளின் வலியைப் பேசும் பில்டர் கோல்ட்

தமிழ் சினிமாவில் திருநங்கைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படங்கள் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் தான் பில்டர் கோல்ட். இதனை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்

திருநங்கைகளுக்கு எந்த சலுகையும் வேண்டாம் ,அந்தஸ்தும் வேண்டாம், அவர்களை அவர்கள் உலகத்தில் வாழ விட்டால் போதும் என்பதை சொல்லும் படம் இது என கூறப்படுகிறது .

பொதுவாக திரைப்படங்களில் திருநங்கைகளின் வாழ்க்கை முழுமையாக காட்டப்படுவதில்லை. அதுதான் நிதர்சனம். ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க திருநங்கைகளின் வாழ்க்கையையும் வலியையும் சொல்லும் படமாக இருக்கிறது.

திருநங்கைகளை மையப்படுத்தி வரும் இந்தப் படம் அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்கலாம்.