November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அடுத்தடுத்த புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆகும் சிம்பு

கன்னட மொழியில் பிளாக்பஸ்டர் ஹிட்டான மஃப்டி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் முன்னதாகவே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சிம்பு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் சிம்புவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த மஃப்டி தமிழ் ரீமேக் படத்திற்கான தலைப்பு வரும் 24 ஆம் திகதியன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.

கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் இந்த மஃப்டி .

சிம்பு தனது உடல் எடையை குறைத்து, சினிமா துறையில் தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க விறுவிறுப்பாக போராடிக் கொண்டிருப்பதை நாம் காணமுடிகிறது. இது முன்னணி நட்சத்திரங்களுக்கு ஒரு சிறிய பயத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தற்போது திரைக்கு வர தயாராகி கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் களத்தில் இறங்கியிருக்கும் சிம்புவால், இடைப்பட்ட காலங்களில் வந்து தங்களை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்ட பல நடிகர்கள் பயத்தில் உள்ளார்கள் என்பது தான் நிதர்சனம்.

2021 ஆம் ஆண்டில் தத்தமது படங்களை வெளியிடுவதில், தமிழ் சினிமாவிற்குள் ஏகப்பட்ட போட்டியாளர்கள் உருவாகி விடுவார்கள் என்பதுதான் உண்மை.

தற்போது நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு மட்டுமல்ல சினிமாத்துறையினருக்கும் ஷாக் கொடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்து விறுவிறுப்பாக படங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் அன்று திரைக்கு வரத்தயாராக இருக்கிறது .

மேலும் தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் விறுவிறுப்புடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மஃப்டி திரைப்படத்தை தயாரிக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ,சிம்பு ,கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்க இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.