October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நயன்தாராவின் வளர்ச்சிக்கு முன்னணி நடிகர்கள் தேவைப்பட்டார்கள்’

தற்போது தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் .

தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார் ஆண்ட்ரியா.

சிறந்த பாடகியான இவர் சிறந்த ஒரு கதாநாயகியாகவும் வளர்ந்துள்ளார் என்றால் அது இலகுவான விடயமல்ல.

ஆயிரத்தில் ஒருவன் ,விஸ்வரூபம், வட சென்னை, தரமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா திரையுலகில் நடிகைகள் முன்னணி கதாநாயகிகளாக வளர முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டியதாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன்பாேது நயன்தாராவை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. நயன்தாராவின் வளர்ச்சிக்கு ரஜினி, விஜய் ,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் தேவைப்பட்டது எனவும் ஆனால் தன்னுடைய வளர்ச்சிக்கோ சிறந்த படங்களின் கதைகள் மட்டுமே தேவைப்பட்டது என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.