பல கோடி ரூபாயில் தயாரான மம்முட்டியின் பிரமிக்க வைக்கும் நகரும் வீடு பற்றி தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
தென்னிந்தியாவிலேயே நவீனமான, மிகப் பெரியதுமான இந்த கேரவனை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி வாங்கியுள்ளார்.
குண்டு துளைக்காத இந்த கேரவன் பல கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கார்கள் மீது அளப்பரிய விருப்பம் உண்டு என கூறப்படுகிறது. இதனால் அவர் விதவிதமான கார்களை வாங்கி வைத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்த வகையில் மம்முட்டி புதிதாக வாங்கியுள்ள கேரவேனும் தற்போது கேரளாவில் பிரபலமாகியுள்ளது. அதாவது சினிமா படப்பிடிப்பில் தான் பொதுவாக கேரவனை பயன்படுத்துவார்கள்.தற்போது நவீனத்துவமிக்க சகல வசதிகளையும் கொண்ட ஒரு நகரும் வீடாக இந்த கேரவன் காணப்படுவதுதான் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள கூத்தமங்கலம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஓஜோஸ் என்ற நிறுவனம்தான் கேரவன் கட்டுவதில் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனக்கான ஒரு நவீன கேரவனை பதிவு செய்திருக்கிறார். இதற்காக பென்ஸ் நிறுவனத்திடமிருந்து 12 மீட்டர் நீளம் கொண்ட வாகனம் ஒன்றை வாங்கி கேரவனாக மாற்றும் பணி நடைபெற்றுள்ளது.
இந்த கேரவனில் உள்ள வசதிகளை பார்த்தால் பிரமித்துப் போய் விடுவார்கள். செமி புல்லட் ப்ரூப் ரக இந்த வாகனம், ஓடும்போது உள்ளே துளி இரைச்சல் கூட கேட்காது என கூறப்படுகிறது. குலுக்கல் எதுவும் இதில் தெரியாது எனவும் சொல்லப்படுகிறது.
தனது மொபைல் போன் வழியாகவே இந்த வண்டியில் உள்ள தொழில்நுட்ப வசதிகளை இயக்க முடியும் என சொல்லப்படுகிறது.
நவீன கிச்சன் வசதி, படுக்கையறை வசதி, கழிப்பறை வசதி, டச் ஸ்க்ரீன் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வண்டியில் ஒருவாரத்துக்கு தேவையான தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் உண்டு.
பாதுகாப்புக்காக 360 டிகிரியில் இயங்கும் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த கேமரா புகைப்படங்கள் எடுத்து மம்முட்டியின் செல்போனுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இங்கு ஹோம் தியேட்டரும் இருப்பது மேலதிக சிறப்பம்சமாகும். ஆகவே சகல வசதிகளும் கொண்ட ஒரு நவீன வீட்டை மம்முட்டி வடிவமைத்திருக்கிறார். அவர் சினிமா படப்பிடிப்புக்கு செல்லும்போது இவ்வாறான கேரவனை பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். தற்போது கொரோனா காலத்தில் தனக்கென ஒரு பிரத்தியேகமாக நவீன நடமாடும் வீட்டை அவர் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.