கடவுள் போல் வந்து சோனு சூட் மக்களுக்கு உதவுகிறார் எனக்கூறி சாேனு சூட்டுக்கு கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. திரையில் வில்லனாக தோன்றினாலும் நிஜத்தில் ஹீரோவாக திகழ்கிறார் நடிகர் சோனு சூட் . இவரின் மனிதாபிமானமிக்க செயல்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தெலுங்கானாவில் ஒரு கிராம மக்கள் அவரின் சிலையை நிறுவி கோயில் கட்டி வழிபட்டுள்ளனர்.
தனது நல்ல செயல்களால் சோனு சூட் கடவுளின் இடத்தை அடைந்துவிட்டார் எனவும் அதனால் தான் அவருக்கு கோயில் கட்டி வழிபடுவதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் தங்களுக்கு கடவுள் போன்றவர் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர் .
சோனு சூட் தனது அளப்பரிய செயல்களால் மக்களின் இதயத்தில் இடம் பிடித்துவிட்டதால், அவருக்கு பரிசாக இந்த சிறிய சிலையை உருவாக்கியுள்ளதாக ,இந்த சிலையை நிறுவியுள்ள சிற்பி மதுசூதன் பால் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம மக்களே இவ்வாறு நடிகர் சோனு சூட்டின் சிலையை நிறுவி கோயில் எழுப்பியிருக்கிறார்கள்.
சோனு சூட்டின் சிலையை அலங்கரித்து,ஆரத்தி எடுத்து தீபாராதனை காட்டி வழிபட்டுள்ளனர். அப்போது பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வழிபட்டிருக்கிறார்கள் .
கொராேனா வைரஸ் மூலம் உலகளவில் ஹீராேவாகத் தென்பட்டவர் தான் ஹிந்தி நடிகர் சாேனு சூட். மனிதாபிமானமிக்க அளப்பரிய, மகத்தான சேவைகளைச் செய்துள்ளார் இவர்.
மேலும் தன்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் தனது சாெத்துக்களை அடமானம் வைத்து நன்மைகளைச் செய்துள்ளார்,
கோடிக்கணக்கான தனது சாெந்தப் பணம் தீர்ந்ததை எண்ணி வருந்தாமல், தன்னிடமிருந்த பல காேடிக்கணக்கான பெறுமதிமிக்க சாெத்துக்களை அடமானம் வைத்து மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து இன்று மாமனிதராக திகழ்கின்றார்.
திரையில் வில்லனாக மட்டுமே தெரிந்த சூட்டை ஹீரோவாக அடையாளம் காட்டியுள்ளது அவரது மனிதாபிமானம். இந்த நிலையில் தெலுங்கானா மாநில கிராம மக்கள் அவருக்கு கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.
தமது குறைகளை தீர்த்து வைத்த நடிகர் சோனு சூட் இந்த கிராம மக்களுக்கு கடவுளாக தோன்றியதில் எந்த சந்தேகமும் இல்லை.