July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அசுரன், சூரரைப்போற்று படங்களுக்கு கெளரவம்

78வது கோல்டன் க்ளோப் விருதுகள் விழா அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதில் திரையிடப்படுவதற்கு சர்வதேச அளவில் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியான படங்கள் தேர்வாகி இருக்கின்றன.

இதில் மிகப்பெரிய கெளரவமாக தமிழ் சினிமாவில் இருந்து இரண்டு திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து, திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “அசுரன்”படம் திரையிடப்பட இருக்கிறது.

இதேபோல சூர்யா நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற, “சூரரைப்போற்று” திரைப்படமும் திரையிடப்பட இருக்கிறது.

யதார்த்த நிகழ்வுகளையும், உணர்வுகளையும் படம்பிடித்து காட்டியதில் இந்த இரு படங்களுக்கும் மிகப் பெரும் பங்குள்ளது.

சர்வதேச கவனத்தைப் பெறப் போகும் இத்தகைய தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்களுக்கும் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் தனுஷின் அசுரன் படங்கள் திரையிடப்படவுள்ளன.