
2012 ல் வெளியான சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்த ” போடா போடி” படம் பெரிய வெற்றி பெற்றது.
இதை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இது அவரின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. கதையும் தயாராக இருக்கிறது. இயக்குனர் யார் என்பது மட்டும் தெரியவில்லை.
போடா போடி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பதம் குமார் போடா போடி 2 படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.
தற்சமயம் நடிகர் சிம்பு முன்னணி இயக்குனர்களான சுசீந்திரன் , சுந்தர் சி படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கு பிறகு கற்றது தமிழ் ராம் அவர்களின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார்.இதற்குப் பிறகே போடா போடி 2. ல் நடிப்பார் என்று தெரிகிறது.
எது எப்படியோ, சிம்பு பழையபடி தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதை அவரது ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள்.
2021 சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து படைக்கும் ஆண்டாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.