விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,ஷாகித் கபூர் நடிக்கும் புதிய வெப்சீரிசை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது அமேசான்.
கொரோனாவினால் திரையரங்குகள் முழுமையாக திறக்கப்படாத நிலையில், அந்த இடத்தை ஒன்லைனில் இருக்கும் வெப்சைட்டுகள் மற்றும் ஒடிடி தளங்கள் அழகாக பயன்படுத்தி வெற்றி கண்டன.
இந்தியாவைப் பொருத்தவரை பெரிதாக படங்களை பார்க்காத நபர்கள் கூட, இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில், ஒன்லைனில் நிறைய படங்களைப் பார்த்தனர்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட ஓடிடி தளங்கள், நிறைய புதுப் படங்களை வாங்கி, தங்களை பலப்படுத்திக் கொண்டன.
பொன்மகள் வந்தாள், சூரரைப்போற்று ,க.பெ .ரணசிங்கம் என்று நிறைய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
தற்சமயம் இந்தியாவில் கொரோனாவை, கட்டுக்குள் கொண்டு வந்தவுடன், சிறிது சிறிதாக திரையரங்குகள் திறக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இதை நன்கு கவனித்த ஒடிடி தளங்கள், எதிர்காலத்தை திட்டமிட்டு அதிரடியாக வெப்சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டன.
இதில் இந்தியாவில் இருக்கும் முன்னணி தளமான அமேசான் அனைத்து மொழிகளுக்குமான, ஒரு வெப்சீரிஸை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாகித் கபூர் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
அதேபோல தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் தயாரிக்கும் போது, அந்த அந்த மொழியில் இருக்கும், நடிகர் மற்றும் நடிகையை பயன்படுத்தி, ரசிகர்களை கவர்ந்திழுக்க திட்டமிட்டுள்ளனர்.
இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இந்த தொடரை இயக்க இருக்கிறார்கள். இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இவர்கள் ஏற்கனவே அமேசானுக்காக பேமிலி மேன் 1 என்ற வெப்சீரியை எடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர். அதைத்தொடர்ந்து பேமிலி மேன் 2 என்ற வெப்சீரியை அமேசானுக்காக எடுத்து வருகிறார்கள்.
எதிர்கால மாற்றங்களைக் கணித்து, ரசிகர்கள் விரும்பும் நடிகர் நடிகையரை வைத்து எடுக்கப்படும் இத்தகைய ஓடிடி தொடர்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்றே சொல்லலாம்.