January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனவரி வெளியாகவுள்ள அதர்வாவின் ‘தள்ளிப்போகாதே’

கண்டேன் காதலை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ,பூமராங், சேட்டை, ஜெயம்கொண்டான் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை இயக்கிய ஆர். கண்ணன் அதர்வாவை வைத்து இயக்கியுள்ள தள்ளிப்போகாதே திரைப்படம் ஜனவரியில் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது .

சந்தானம் நடித்து வெளியாகிய பிஸ்கோத்து படத்தை இயக்கிய கண்ணன் பின்னர் அதர்வா நடிப்பில் தள்ளிப்போகாதே படத்தை இயக்கியுள்ளார்.

இதில் அனுபமா பரமேஸ்வரன் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். காளி வெங்கட்,அமிதாஷ்,ஆடுகளம் நரேன் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தெலுங்கில் ஹிட்டான நின்னுக்கோரி என்ற படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தள்ளிப்போகாதே படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் ஜனவரியில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான மசாலா பிக்ஸ் அறிவித்திருக்கிறது.கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாெதுவாக பெரிய பட்ஜெட் படங்களுக்கான சில காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்குவர். அதேபோல இந்த படத்திலும் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஒரு பகுதி வெளிநாட்டில் நடைபெறுவதாக இருக்கிறது. இதற்காக ரஷ்யாவிற்கு அருகில் உள்ள அசர்பைஜானில் கடும் பனி பொழிவு நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.