July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘அசுரன்’

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது.

1952ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழா மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கோவாவில் நவம்பர் மாதம் 20ம் திகதி முதல் 28ம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி முதல் 24ம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்பட விழாவில் தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. அதுபோல் தேன் என்ற தமிழ் படமும் தேர்வாகியுள்ளது.